Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Wednesday, January 02, 2019

மருந்துகளின் விலைகள் குறைக்கப்படும் ; சுகாதார அமைச்சர் !!

Currently online
சுகாதார போஷாக்கு மற்றும் சுதேச வைத்தியத்துறை அமைச்சர் ராஜித சேனாரத்ன, பல மருந்து வகைகளின் விலைகள் இவ்வாண்டில் குறைக்கப்படவுள்ளதாக தெரிவித்துள்ளார்.

புத்தாண்டுக்கான கடமைகளை ஆரம்பிக்கும் நேற்றைய(01) நிகழ்விலேயே ராஜித சேனாரத்ன இதனை குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அவர், அரசியல் நெருக்கடிகளினால் ஏற்பட்ட மருந்து தட்டுப்பாடு தற்காலிகமானது என சுட்டிக்காட்டியுள்ளதோடு எதிர்வரும் நாட்களில் மருந்து தட்டுப்பாடு விரைவில் நீங்கும் எனவும் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

இதேவேளை தற்போது 200 மருந்து வகைகளுக்கு தட்டுப்பாடு நிலவுகின்றதாகவும் இதற்கு காரணம் அரசியல் நெருக்கடி நிலவிய காலப்பகுதியில் இந்த மருந்துகளை உரியவர்கள் இறக்குமதி செய்யவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.