Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Saturday, January 26, 2019

மன்னாரில் கேரள கஞ்சா பொதியுடன் இருவர் கைது !!

Currently online
கேரள கஞ்சா பொதியுடன் தென்பகுதியைச் சேர்ந்த இருவர் மன்னாரில் நேற்று (25) இரவு கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த விடயம் தொடர்பில் கடற்படையினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலை அடுத்து, மன்னார் பிரதான பாலத்தின் ஊடாக வந்த ஹயஸ் ரக வாகனத்தை வழிமறித்து சோதனையிட்ட போது சுமார் 2 கிலோ கிராம் எடை கொண்ட கேரள கஞ்சாப்பொதி மீட்கப்பட்டுள்ளது.

அத்துடன் குறித்த வாகனத்தில் பயணித்த உடுகம மற்றும் ஜாஏல பகுதிகளைச் சேர்ந்த 37 மற்றும் 47 வயதுடைய இருவர் கைது செய்யப்பட்டனர்.

குறித்த சந்தேக நபர்கள் கேரள கஞ்சா பொதி மற்றும் வாகனம் என்பன மன்னார் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.