Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Friday, January 25, 2019

பேராபத்து ; பயிர்களை நாசப்படுத்தும் மற்றுமொரு புதிய வகை புழு !!

Currently online
சேனா படைப்புழுவைப் போன்று நெல் மற்றும் சோளப் பயிர்களை நாசப்படுத்தும் மற்றுமொரு புதிய வகை புழு இனம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்த புழு இனம் திம்புலாகல – மனம்பிட்டிய பிரதேசத்திலிருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

​நாற்று இலைகளில் இருந்து குறித்த புழுக்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக குறித்த பிரதேச விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

இவை, நெற்கதிர்கள் மாத்திரமன்றி, நாற்று இலைகளையும் உணவாக உட்கொண்டிருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே சேனா என்ற படைப்புழு சோளம் உள்ளிட்ட பயிர்களை அழித்து வருகிறது. இதன் காரணமாக சுமார் 50 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பு சோள செய்கை பாதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் புதிய வகை புழு நெற்கதிர்களை இலக்கு வைத்து தாக்குதல் நடத்துவதால் இலங்கை பாரிய நெருக்கடிக்கு முகங்கொடுக்க நேரிடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. 
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.