Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Friday, January 04, 2019

விரைவில் விஜயகாந்துக்கு சிறுநீரக மாற்று அறுவைச்சிகிச்சை !!!

Currently online
நடிகரும், தேமுதிக., தலைவருமான விஜயகாந்த் உடல்நலம் பாதிக்கப்பட்டு அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் விரைவில் இவருக்கு  சிறுநீரக  மாற்று அறுவைச்சிகிச்சையும்  நடக்க இருக்கிறது.

தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த், சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றுள்ளார். சென்னையில், தமிழக பா.ஜ., தலைவர் தமிழிசையின் கணவரான, சிறுநீரக சிகிச்சை நிபுணர் சவுந்தர்ராஜன் தான், விஜயகாந்துக்கு சிகிச்சை அளித்து வந்தார். விஜயகாந்த்திற்கு கிட்னி மாற்று சிகிச்சை செய்தே ஆக வேண்டும் என கூறிவிட்டார். 

மேலும் இதனால் சில மாதங்களுக்கு முன்பாகவே விஜயகாந்த் அமெரிக்கா சென்றுவிட்டார். கிட்னி கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டது. தற்போது அவருக்கு கிட்னி கிடைத்துவிட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. அமெரிக்காவில், தனது நண்பர் ஒருவரது வீட்டில் தங்கியுள்ள விஜயகாந்தும், அவரது குடும்பத்தினரும், இந்த மாதம் இறுதியில் சிகிச்சையை முடித்துவிட்டு, ஒரு மாதம் ஓய்வும் எடுத்துவிட்டு, மார்ச் முதல்வாரத்தில் தமிழக திரும்ப உள்ளமை குறிப்பிடத்தக்கது. 
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.