Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Thursday, January 10, 2019

காதல் ஆலாபனை..........!!!!!! அன்பழகி கஜேந்திரா

Currently online
விழிகளில் நீரேந்தி
ஓலமிடும் கடலோரம்
பொன்மேனிப் பெண்ணொருத்தி
மேற்கு வானம் பார்த்திருந்தாள்...

புன்னகையைக் களவாடி
பூமேனி தனை வாட்டி
சென்றவன் பிணி தீர்க்க
விரைவாக வருவானோ?....

கண்ணே...
கடல் மணல் பட்டதால்
கண்களில் கண்ணீரோ?
கண்களில் இதழ் பதித்து ஊதுகின்றான் பரிவோடு...

வெண்தாமரை தலைசாய்ந்தாள் அவன் தோளோடு..
காதல் நோய் தீர
கடற்கரை மணல் மெத்தையானது....

உள்ளமது உவகை கொண்டு
கடல் அலைபோல் பொங்கியது...
குங்குமமாய்ச் சிவந்த கன்னக்
குழிகளுக்குள் ஔி பரவ
கோலமொன்று போட்டாளே
கோதை மகள் பெருவிரலால்....

மதுவூறும் இதழ் மானே
இதுதானோ உன் ஆவல்...

கலங்காதே கண்மணியே
கடலன்னை சாட்சியாக
விரைவில் உன்னை கரம் பிடிப்பேன்...
துயரேதும் நீ கொள்ளாதே...
இன்ப துன்பம் இரண்டிலுமே
இணைந்து வருவேன் எந்நாளும் என்றானே...

அலையிலாடும் படகு போல்
அமைதியில்லா வாழ்விதிலும்
ஆழமான காதலினால்
வாழ்வை வெல்வோம் 
பல ஜென்மத்துக்கும்....

மூன்று முடிச்சிட்டு உன்னை
முத்தாரமாய் அள்ளும் வரை
காதல் எல்லை எதுவென்று
இந்த கடலில் ஆழம் கண்டறிவோம்
வா பெண்ணே !

           நன்றி 
அன்பழகி கஜேந்திரா
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.