Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Friday, January 04, 2019

நீர் தேக்கத்தில் மிதந்த ஆணின் சடலம்: கொலையா? தற்கொலையா?

Currently online
இன்று காலை தலவாக்கலை காவற்துறை பிரிவுக்குட்பட்ட மேல் கொத்மலை நீர்தேகத்திலிருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டதாக தலவாக்கலை காவற்துறையினர் தெரிவித்தனர்.

குறித்த பிரதேசத்தில்  மீட்கப்பட்ட ஆணின் சடலம் பற்றி  நீரில் அடித்துச் சென்று உயிரிழந்தாரா அல்லது நீர் தேக்கத்தில் பாய்ந்து உயிரிழந்தாரா அல்லது எவராவது கொலை செய்து நீர்தேக்கத்தில் போட்டார்களா என்பது தொடர்பாக பலகோணங்களில் காவற்துறை விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

மீட்கப்பட்ட சடலம் இதுவரை யாருடையது என அடையாளம் காணப்படவில்லை. மரண விசாரணைகளின் பின் சடலம் வைத்திய பரிசோதனைக்காக நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாக காவற்துறையினர் தெரிவித்தனர்.

மேலும் இச்சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை தலவாக்கலை காவற்துறை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.