Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Tuesday, January 22, 2019

சுவையான சத்தான வாழைப்பூ சப்பாத்தி செய்ய ரெடியா ??

Currently online
தேவையான பொருட்கள் :
கோதுமை மா - கால் கிலோ
பாசிப்பருப்பு - 5 டீஸ்பூன்
நறுக்கிய வாழைப்பூ - ஒரு கப்
சின்ன வெங்காயம் - 7
பச்சைமிளகாய் - ஒன்று
பூண்டு - 2 பல்
சீரகம் - 2 சிட்டிகை
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
தயிர் - 2 டீஸ்பூன்

செய்முறை 
வாழைப்பூவை நார் நீக்கி பொடியாக நறுக்கிக் கொள்ளவும். வெங்காயம், ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

பாசிப்பருப்பை சிறிதளவு தண்ணீர் விட்டு வேகவைத்து தண்ணீரை வடித்துக்கொள்ளவும். இத்துடன் வாழைப்பூ, வெங்காயம், பச்சைமிளகாய், பூண்டு, சீரகம், உப்பு சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கி இறக்கி சூடு ஆறியதும், மிக்ஸியில் சேர்த்து பேஸ்ட் பதத்துக்கு அரைத்துக் கொள்ளவும்.

அரைத்த விழுதை கோதுமை மாவுடன் சேர்த்து, தயிர், உப்பு கலந்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, சப்பாத்தி மாவு பதத்துக்குப் பிசைந்து அரை மணி நேரம் ஊற வைக்கவும்.

மாவை சப்பாத்திகளாக உருட்டி வைக்கவும். தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் அதில் உருட்டி வைத்துள்ள சப்பாத்தியை போட்டு சுற்றி சிறிது எண்ணெய் ஊற்றி வெந்ததும் திருப்பி போட்டு எடுக்கவும். சுவையான சத்தான வாழைப்பூ சப்பாத்தி ரெடி.

வாழைப்பூ சீக்கிரத்தில் கறுத்துவிடும். எனவே, மா பிசைந்ததும் சப்பாத்தி போடுவது நல்லது.

மருத்துவ பயன்கள் :

சர்க்கரை நோய்க்கு சிறந்த மருந்தான வாழைப்பூ ரத்த மூலம், உடல் சூடு, வயிற்றுக் கடுப்பு, பெண்களுக்கான மாதவிடாய் பிரச்னைகளுக்கு, மலட்டுத் தன்மை நீங்க, கைகால் எரிச்சல், போன்றவற்றிற்கு வாழைப்பூ மகத்தான மருந்தாகிறது.

jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.