Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Monday, January 28, 2019

வடமராட்சி கரணவாயில் மயங்கி விழுந்த கர்ப்பிணி பெண் உயிரிழப்பு !!

Currently online
மயங்கி விழுந்த கர்ப்பிணி பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

32 வயதுடைய குலதீபன் பிரிந்தா என்ற கர்ப்பிணி பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இச் சம்பவம் கரணவாய் தெற்கில் நேற்று(27) மாலை இடம்பெற்றுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது ;
பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் கடமைபுரியும் குறித்த கர்ப்பிணி பெண் வேலை முடித்து விட்டு மதியம் வீடு திரும்பியுள்ளார்.

வீடு திரும்பிய அவர் சற்று நேரத்தில் மயக்கமுற்று விழுந்துள்ளார்.

இதனையடுத்து அவரை பருத்தித்துறை ஆதாரவைத்தியசாலையில் அனுமதித்த போது அவர் மரணமடைந்ததாக தெரிவிக்கப்பட்டது.

பருத்தித்துறை பொலிஸார் குறித்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.