Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Saturday, January 05, 2019

அஜித் பட இயக்குனருடன் இணைந்த ஆரவ் ; வெளியான சுவாரஸ்ய தகவல்கள் !!

Currently online
பிக்பாஸ் சீசன் 1இன்  டைட்டில் வின்னர் ஆரவ்வின் அடுத்த படத்தின் இயக்குனர் அஜித்திற்கு பல மெகா ஹிட் படங்களை கொடுத்த இயக்குனர் தான் என்பது அதிகாரபூர்வாக வெளியாகியுள்ளது.

மொடலிங் நடிகரான ஆரவ் பிக்பாஸ் வெற்றிக்கு பிறகு ராஜபீமா என்ற படத்தில் நாயகனாக நடித்து வருகிறார். இந்த படம் விரைவில் திரைக்கு வர உள்ளது.

இந் நிலையில் தற்போது ஆரவ்வின் அடுத்த படம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதனை ஆரவ்வும் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தின் மூலமாக உறுதி செய்துள்ளார்.

ஆம், அந்த இயக்குனர் வேறு யாரும் இல்லை. தல அஜித்தை வைத்து காதல் மன்னன், அமர்க்களம், அட்டகாசம் ஆகிய மெகா ஹிட் படங்களையும் விக்ரமின் ஜெமினி படத்தை இயக்கியவருமான சரண் தான்.

இவர்கள் இணைய உள்ள புதிய படத்திற்கு மார்க்கெட் ராஜா எம்.பி.எஸ் எனவும் பெயரிட்டுள்ளனர் என்பது கூடுதல் தகவல்.

மேலும் இந்த படத்தில் ராதிகா, நாசர், யோகி பாபு என பலர் இணைந்து நடிக்க உள்ளதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளன.

jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.