Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Friday, January 11, 2019

இந்தியாவை வீழ்த்தியது ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணி !!!

Currently online
ஆசிய கோப்பை கால்பந்து போட்டியில் இந்தியாவை 2- 0 என்ற கோல் கணக்கில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணி வீழ்த்தியது.

17-வது ஆசிய கோப்பை கால்பந்து போட்டி சமீபத்தில் தொடங்கியது. இது பெப்ரவரி 1-ம் திகதி வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய், அபுதாபி, சார்ஜா, அல் அய்ன் ஆகிய 4 நகரங்களில் நடைபெறவுள்ளது.

இதில் நேற்று இரவு நடைபெற்ற லீக் ஆட்டத்தில் ‘ஏ’ பிரிவில் இடம்பெற்றுள்ள இந்தியா மற்றும் ஐக்கிய அரபு எமிரேஸ் அணிகள் மோதின.

ஆட்டத்தின் 41-வது நிமிடத்தில் யுஏஇ அணியின் வீரர் கைபான் முபாரக் முதல் கோல் அடித்து தனது அணியை முன்னிலைப்படுத்தினார். அதன்பின் எந்த அணியும் கோல் அடிக்கவில்லை. இதனால் முதல் பாதியில் யு.ஏ.இ. அணி 1-0 என முன்னிலை வகித்தது.

ஆட்டத்தின் இரண்டாவது பாதியில் 88வது நிமிடத்தில் யு.ஏ.இ. அணியின் வீரர் அலி அகமது மாப்கவுத் ஒரு கோல் அடித்தார். கடைசி வரை போராடிய இந்திய அணியினரால் ஒரு கோல் கூட அடிக்க முடியவில்லை.

இறுதியில், யு.ஏ.இ. அணி 2-0 என்ற கோல் கணக்கில் இந்தியாவை வீழ்த்தியது. 

இந்திய அணி தனது கடைசி லீக் போட்டியில் பக்ரைனை வரும் 14ஆம் திகதி சந்திக்கஉள்ளது.
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.