Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Saturday, January 12, 2019

உயிர் பேசுகிறது...........!!!!!!!!! தோழி கவிதாயினி

Currently online
கொண்டாடித் தீர்த்த - என் 
உடலை விட்டு
கொஞ்சம் கொஞ்சமாய் 
உயிர் பிரிந்து சென்றது...!

வீட்டின் நடுத்துண்டில்
வீம்பிற்காக அலகரித்த படி
வீணாய் போன என் தேகம் - பிணமாய்
விளம்பரப்படுத்தப்பட்டது...!

இயங்காது ஸ்தம்பித்த 
இதயத்தை காணவென - நான் 
இறந்த வீட்டில் கூட்டம் 
கூட ஆரம்பித்தது...!

பறை மேளச் சத்தம்...
பாட்டிகளின் ஒப்பாரிப் பாடல்...
ஐயரின் தேவர ஓதல்...

பாடையில் படுத்திருந்து 
பார்க்க பார்க்க - எனக்குள் தான் 
பலவகை சிலிர்ப்பு 
பரவத் தொடங்கியது...!

வீட்டாரின் கதறல் என்னையும்
அழச் செய்ய - எழுந்து போய்
ஆறுதல் கூற உயிர் முனைந்தது ...!

நண்பர்களின் புலம்பல் கண்டு 
நான் கூட நின்று 
கட்டியணைத்து தட்டிக் கொடுக்க 
மனம் ஏங்கியது ...!

இருக்கும் வரை எட்டிப் பார்காத
சில உறவுகளின் - இன்றைய
இரக்கத்தை கண்டு
இளக்காரமாய் சிரித்துக் கொண்டேன் ..!

கவலையடைவதாக 
காட்டிக் கொள்ளவென
கண்களில் கண்ணீர் மல்கும் - சில
காகித முகங்களை கண்டு 
சலித்துக் கொண்டேன் ....!

வெற்றுடலின் மீது
மலர்மாலை வனப்பூட்டியது கண்டு
வெறுமையாய் ஓர்
பார்வை பார்த்திருந்தேன்...!

பிணத்தை எடுக்க நேரம் சரியென 
யாரோவொருவரின் சத்தம் கேட்க 
எனக்கு மேல் விழுந்தபடி
அழுகுரல் வெகுவாய் அதிகரித்தது ...!

பட்டாசுகள் முழங்க 
உற்றார் உறவினர்கள் புடைசூழ
இடுகாடு நோக்கி - என் 
பாடை பயணமானது...!

கடைசியாக பார்ப்பவர்கள் 
பார்த்து கொள்ளுங்கள் என
வெட்டியான் கூறி கொள்ள 
சில உறவுகள் விழிநீரை
வழிந்தோடவிட்டன ..!

கொள்ளியோடு காத்து நின்ற
எந்தன் பிள்ளை
தீப்பந்தத்தை செதிலில்
ஏற்றிவிட - என் தேகம்
கரிக்கட்டையாகிப் போனது...!

ஈமச்சடங்குகள் முடிந்து விட
அங்கிருந்தவர்கள் அனைவரும் 
அவரவர் இருப்பிடம் நோக்கி 
நகர்ந்தனர்...என் 
வீடை பார்க்க நான் 
எத்தனித்த போது தான் 
உணர்ந்து கொண்டேன்...
உடல் கொண்ட உயிரல்ல இது
வெறும் ஆவியென்று....!

            நன்றி 
தோழி கவிதாயினி
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.