Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Thursday, January 31, 2019

சுதந்திர தினத்தை முன்னிட்டு சில வீதிகளில் போக்குவரத்து தடை !!

Currently online
இன்று முதல் எதிர்வரும் 4ஆம் திகதி வரை விசேட போக்குவரத்து ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

71ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு காலிமுகத்திடலை அண்மித்த வீதிகளில் விசேட போக்குவரத்து ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ஒத்திகை நடவடிக்கைகள் இடம்பெறுவதால், சில வீதிகள் மூடப்படவுள்ளது.

இவ் விடயத்தை போக்குவரத்து மற்றும் வீதி பாதுகாப்புப் பிரிவின் பணிப்பாளர், பொலிஸ் அத்தியட்சகர் இந்திக ஹப்புகொட தெரிவித்துள்ளார்.

காலிமுகத்திடல் சுற்றுவட்டம் முதல் பழைய பாராளுமன்ற சுற்றுவட்டம் வரையிலும் சைத்தியா வீதியூடாகவும் வாகனங்கள் செல்வதற்குத் தடைவிதிக்கப்பட்டுள்ளது.

கொள்ளுப்பிட்டி சந்தியால் காலிமுகத்திடல் நோக்கி பிரவேசிப்பதற்கும், சென். மைக்கல்ஸ் வீதியால் காலி முகத்திடல் நோக்கிப் பயணிப்பதற்கும் தடைவிதிக்கப்பட்டுள்ளது.

தொடுன்ன சுற்றுவட்டத்தின் ஊடாக காலி வீதிக்குள் பிரவேசிப்பதற்கும், செரமிக் சந்தியூடாக பழைய பாராளுமன்றம் நோக்கி பயணிப்பதற்கும் வாகனங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், யோர்க் வீதியால் இலங்கைவங்கி மாவத்தைக்குள் பிரவேசிப்பதற்கும் சீனோர் சந்தியால் கோட்டை ரயில் நிலைய வீதியூடாக மத்திய தபால் பரிமாற்று நிலைய சந்தியூடாக செரமிக் சந்திக்குள் பிரவேசிப்பதற்கும் வாகனங்களுக்கு அனுமதி வழங்கப்படமாட்டாது.

மார்க்கான் மாக்கார் வீதி, உத்தரனந்த மாவத்தை சந்தியூடாக காலிமுகத்திடல் சுற்றுவட்டத்திற்குள் பிரவேசிப்பதற்கு குறிப்பிட்ட காலப்பகுதியில் வாகனங்களுக்கு அனுமதி வழங்கப்படாது.

குறித்த வீதிகளில் ஒத்திகை நடவடிக்கைகள் இடம்பெறுவதால் காலை 7 முதல் நண்பகல் 12 மணிவரை வீதிகள் மூடப்படவுள்ளன.
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.