Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Thursday, January 24, 2019

சுவையான சிக்கன் தொக்கு செய்வது எப்படி?

Currently online
தேவையான பொருட்கள்

சிக்கன் – கால் கிலோ

தக்காளி – 1
இஞ்சி, பூண்டு விழுது – ஒரு தேக்கரண்டி

மிளகாய்த்தூள் – 1 தேக்கரண்டி

பட்டை, லவங்கம் – தலா 2 துண்டுகள்

எண்ணெய் – தேவையான அளவு

வெங்காயம் – 1

உப்பு – தேவையான அளவு

கருவேப்பிலை, கொத்தமல்லி – சிறிதளவு

மஞ்சள் தூள் – சிட்டிகை

மிளகுத்தூள் – 1 தேக்கரண்டி

செய்முறை 

சிக்கனை கழுவி சிறிய துண்டுகளாக வெட்டவும்.

தக்காளி, வெங்காயத்தை சிறிதாக வெட்டவும்.

இஞ்சி, பூண்டை நசுக்கிப் போடலாம் அல்லது விழுது இருந்தால் அப்படியே சேர்க்கலாம்.

ஒரு பாத்திரத்தில் எண்ணெய் விட்டு சூடானதும் பட்டை, லவங்கம் போட்டு தாளித்து வெங்காயம், தக்காளியைச் சேர்த்து வதக்கவும்.

இதில் மஞ்சள் தூள், மி.தூள், உப்பு சேர்த்து ஒரு பிரட்டு பிரட்டவும்.

வாசனை வரும்போது  சிக்கனைச்  சேர்த்து வதக்கவும்..

சிக்கனில் காரக் கலவை நன்றாக சேர்ந்து வரும்படி கலந்து விடவும்.

தண்ணீர் சேர்க்காமல் சிக்கனில் இருக்கும் நீரும் தக்காளி சாறும் எண்ணெய்யும் சிக்கனை வேக வைக்கும்.

தீயாதபடி அவ்வப்போது கிளறவும்.

சிக்கன் நன்றாக வெந்த பிறகு மிளகுதூள் சேர்த்து கிளறி கருவேப்பிலை, கொத்தமல்லித் தழை  சேர்த்து அடுப்பிலிருந்து இறக்குங்கள்.

சுவையான சிக்கன் தொக்கு தயார்.

jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.