Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Saturday, January 05, 2019

கூண்டுக்குள் வைத்து உயிரோடு எரிக்கப்பட்ட நாய் ; சந்தேக நபர் ஒருவர் கைது !!

Currently online
நீர்கொழும்பு – கொப்பர சந்தியிலுள்ள வீடொன்றில் கூண்டில் அடைக்கப்பட்டிருந்த நாயொன்றை எரியூட்டி கொன்றமை தொடர்பில் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேகநபர் குறித்த பகுதியில் கூலித் தொழில் செய்பவர் எனவும் தெரியவந்துள்ளது.

லெப்ரடோ (labrador) இனத்தை சேர்ந்த குறித்த நாய் கடந்த 31 ஆம் திகதி கூண்டிற்கு மண்ணெய் ஊற்றி எரியூட்டப்பட்டுள்ளது.

எரிகாயங்களுக்குள்ளான நாய் கடந்த முதலாம் திகதி இரவு உயிரிழந்தது.

இதேவேளை, நாய் அடைக்கப்பட்டிருந்த இடத்தில் கைவிரல் அடையாளங்கள் காணப்பட்ட நிலையில் இந்தச் சம்பவம் தொடர்பில் கிடைத்த முறைப்பாட்டிற்கு அமைய விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.

இவ்வாறான நிலையிலேயே சம்பவத்துடன் தொடர்புடையவர் என கருதப்படும் 38 வயதுடைய நபர் ஒருவர் நீர்கொழும்பு பெரியமுல்ல பகுதியில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.