Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Friday, January 11, 2019

காதல்...........!!!!!!! சுஜா தவம்

Currently online
கரு விழி முழுதும்
கருக்கிடும் தீயாய்
கண்ணெதிர் வருவதே
காவிய காதல்

கரு ஒரு கனமாய்
கவிகளில் வரியாய்
நூல்களில் சிறக்கும்
முதலடி காதல்

மலரினில் வண்டாய்
கொடியினில் இலையாய்
குறுகிடும் அழகாய்
புவியினில் காதல்

பள்ளியில் கருவும்
கொள்ளியில் ம(மா)னமும்
கொடி கட்டி பறக்கும்
குளத்தடி காதல்

பாழ்பட்ட காமம்-
பெயருக்கு காதல்
தெருவழி சிரிக்கும்
உன்னத காதல்.

தொடுகையில் காதல்
விடுகையில் மோதல்
தூரத்தில் காதல்
துரோகத்தின் சாயல்

கண் கண்ட காதல்
கடைசியில் சோர
கருவினில் ஒன்று
கழுத்தினில் ஒன்று

புண் பட்டு போக
குப்பையில் ஒன்று
குட்டையில் ஒன்று
பாழ்பட்ட காதல்..

    நன்றி
சுஜா தவம்


jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.