Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Wednesday, January 02, 2019

அது ஒரு காலம் ..........!!!! எஸ் பி தீபகன்

Currently online
ஏழெட்டு வருசத்துக்கு முன்
எங்கட ஊர்ல 
ஒரு நாள்..

இதே போல் இரவு
ஒரே குளிரும் கூதலும்

வேளைக்கு படிச்சு முடிச்சு 
படுக்கையும் தயார் செய்ய
அடுக்கு முடிஞ்சுதெண்டு 
அம்மா கூப்பிட்டா 
சாப்பிட வாங்கண்டு

அப்பாவும் வந்தார்.
அக்காவும் தம்பியளும்
சப்பாணி கட்டி 
சத்தம் போடாம இருங்க எண்டார்

மாபிள் கோப்பையில் 
சபை மவுசு கூடிடுச்சு

இடியப்பமும்... 
ஒட்டிமீன் சொதியும் 
இஞ்சி மணத்தோட
செத்தல் மிளகாய் சம்பலும்

மஞ்சள் நிறச்சொதியில 
இடையிடையே இன்னும் 
உயிருள்ள கருவேப்பிலைகள்...

வெங்காயமும் மிளகாயும் 
வெந்து மிதங்கும் ஆங்காங்கே

எண்ணைக்குமிழ்கள் 
இடையிடையே மிதந்து செல்லும்

ஒட்டி மீன் வாசம் 
ஊரெல்லாம் சேதி சொல்லும்

நாலாம் தெரு நாய்கள் கூட
நம்ம வாசல் வந்து நிற்கும்.

இப்பவெல்லாம்
குடும்பமா சேர்ந்து நின்று 
குதூகலிச்சு சண்டை போட்டு
ஒரு வேளை உணவு உண்ண
வாய்ப்புகள் வருவதில்லை....

அப்படியே வந்தாலும்
அந்த சுவையில 
அரைவாசி கூட இல்லை

        நன்றி 
எஸ் பி தீபகன்

jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.