Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Thursday, January 31, 2019

அமெரிக்காவில் வரலாறு காணாத பனிப்பொழிவு !!

Currently online
அமெரிக்காவில் நிலவும் கடும்பனிப்பொழிவால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிப்பட்டுள்ளது. 

அமெரிக்காவில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு பனிப்பொழிவு காணப்படுகிறது. மிச்சிகன், சிக்காக்கோ, நியூயார்க், இலினாய்ஸ் உள்ளிட்ட மாகாணங்கள் உறைபனியால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. 

சிக்காக்கோவில் இரவுநேர வெப்பநிலை மைனஸ் 26 டிகிரியாக குறைந்து விடுகிறது. இதனால் கடலின் மேற்பரப்பு உறைந்து காணப்படுகிறது. சாலையில் திரும்பிய திசையெல்லாம் பனி கொட்டிக்கிடப்பதால் ஏராளமான வாகனங்கள் விபத்தில் சிக்கியுள்ளன. 

தண்டவாளங்கள் பனியால் சூழப்பட்டிருப்பதால் ரயில் சேவைக்காக பலமுறை தண்டவாளங்களுக்கு தீ வைத்த பின்னரே ரயில்கள் புறப்பட்டுச் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. 

பனிபொழிவால் 2,200 விமானங்களின் சேவை நிறுத்தப்பட்டுள்ளன. 

சிக்காக்கோவில் நதி முழுதும் உறைந்து போயுள்ளது. அதே போல் மிச்சிகன் ஏரி முழுதும் உறைந்து காணப்படுகிறது. 

இனிவரும் நாட்களில் பனிப்பொழிவு மேலும் அதிகரிக்கும் என வானிலை அறிக்கைகள் தெரிவிப்பதால் பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருக்குமாறு அந்தந்த மாகாண ஆளுநர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.