Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Monday, January 14, 2019

பருத்தித்துறை கற்கோவளம் பகுதியில் இளைஞர் ஒருவர் படுகொலை !!

Currently online
இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலில்  பருத்தித்துறை கற்கோவளம் பகுதியில்   இளைஞர்  ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

கற்கோவளம் பகுதியில் நேற்று (13) இரவு இரு குழுக்களுக்கிடையே மோதல் ஏற்பட்டுள்ளது. 

இந்த மோதலின் போது, இளைஞர் ஒருவரை கோடாரியால் அடித்து கொலை செய்துள்ளனர்.

வாசுதேவன் அமல்கரன் (வயது 22) என்ற இளைஞரே இந்த சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக பருத்தித்துறை வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பில் பருத்தித்துறைப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.