Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Thursday, January 24, 2019

மஞ்சள் முகமே என் மாமன் மகளே........!!!! பாரதி மைந்தன்

Currently online
கள்ளிக் காட்டின் பூ மகளே 
என் நெஞ்சை கொள்ளையிட்ட 
இனிய தேன் மலரே 
என் மாமன் மகளே

சின்ன நடை போட்டு 
மெல்ல நீ வருகையிலே 
கள்ள மனம் ஏங்குதடி 
பாவி நீ அறியாயோ

நாணத்தில் உன் சிரிப்பு 
சொக்குதடி என் மனது 
காதலனாய் நான் இருக்க 
கள்ளி நீ மறைவதேனோ

உன் சொக்க வைக்கும் வார்த்தையிலே 
சொக்குதடி என் மனது 
கை கூடும் நாள் இன்று 
வந்திடுவாய் அருகினிலே

மஞ்சள் தாலியுடன் 
உன் மஞ்சள் முகம் கானவே 
இந்த பிஞ்சு மனம் 
ஏங்குதடி

மாலை சூடும் நாள் இன்று 
பொன் மகளே வந்திடுவாய் 
நாணத்தில் நீ மயங்க 
காதலனாய் கண்டிடுவேன்

நன்றி 
பாரதி மைந்தன்

jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.