Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Saturday, January 26, 2019

வயோதிபர் ஒருவர் சடலமாக மீட்பு ; மன்னாரில் சம்பவம் !!

Currently online
வயோதிபர் ஒருவருடைய சடலம் மன்னார் பொலிஸாரால் இன்று காலை மீட்கப்பட்டுள்ளது.

குறித்த சடலம் மன்னார் சௌத்பார் பிரதான வீதி, சாந்திபுரம் உப்பளம் பகுதியில் மீட்கப்பட்டுள்ளது.

இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் மன்னார் பனங்கட்டிக்கோட்டு கிராமத்தை வதிவிடமாக கொண்ட கதிர்காமநாதன் அருளானந்தன் (82) என அவரது மகனால் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

நேற்று இரவு வீட்டிலிருந்து சென்ற நிலையிலேயே குறித்த வயோதிபர் இன்று காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

அப்பகுதியால் சென்றவர்கள் சடலத்தை கண்டு மன்னார் பொலிஸாருக்கு தகவல் வழங்கிய நிலையிலே மன்னார் பொலிஸார் சம்பவ இடத்திற்கு சென்று சடலத்தை மீட்டுள்ளனர்.

மன்னார் பொலிஸார் மேலதிக விசாரனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.