Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Friday, January 04, 2019

வழக்கத்துக்கு மாறாக சனத்தொகை பெருக்கத்தில் வீழ்ச்சி காணும் சீனா !!!

Currently online
பல ஆண்டுகளாக உலகிலேயே மிகவும் அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக சீனா திகழ்ந்து வருகிறது.  140 கோடி மக்கள் தொகையிலேயே தொடர்ந்து நீடித்து வருகிறது. அதற்கு ‘ஒரு குடும்பத்துக்கு ஒரு குழந்தை’ என்ற குடும்ப கட்டுப்பாடு திட்டமே காரணமாகும். 

அதை மீறி ஒரு குடும்பத்தில் ஒரு குழந்தைக்கு மேல் பெற்றால் அதிக அளவு அபராதம் விதிக்கப்பட்டது. இதனால் அச்சம் அடைந்த மக்கள் ஒரு குழந்தைக்கு மேல் பெறாமல் நிறுத்திக் கொண்டனர். 

இதனால் சீனாவில் வழக்கத்தை விட மக்கள் தொகை பெருக்கம் குறைந்து விட்டது. சீனாவில் கடந்த ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு நடந்தது. அதில் தேசிய அளவில் ஆண்டுக்கு ஆண்டு 25 லட்சம் என்ற அளவில் மக்கள் தொகை குறைந்து வந்து இருந்தது தெரிய வந்துள்ளது. 

“2018-ம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி சீனாவில் இறப்பு விகிதம் 1 கோடியே 15 லட்சத்து 80 ஆயிரம் ஆக இருந்தது. அதே நேரத்தில் பிறப்பு விகிதம் 12 லட்சத்து 70 ஆயிரமாக மிகவும் குறைந்து விட்டது. இது போன்ற அதிகமாக மக்கள் தொகை குறைந்து வருவது சீனாவின் பொருளாதார வளர்ச்சியை பாதிக்கும். ஏனெனில் மக்கள் தொகை குறைவதன் மூலம் மனித உழைப்பும் குறையும். என்பதாலும் இதை  அறிந்த சீன அரசு குடும்பத்துக்கு 2 குழந்தைகள் பெற்றுக் கொள்ள அனுமதி வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.