Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Thursday, January 24, 2019

பாலியல் ஊக்கி மருந்துகளுடன் கட்டுநாயக்காவில் ஒருவர் கைது !!

Currently online
மலேஷியாவிலிருந்து ஒரு தொகை மருந்து வில்லைகள் மற்றும் கிரீம் வகைகளை சட்டவிரோதமாக இலங்கைக்குள் கடத்திக்கொண்டு வர முயற்சித்த நபர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் நேற்று மாலை  சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட நபர் கம்பஹா – உடுகம்பொல பிரதேசத்தை  சேர்ந்த 62 வயதான வியாபாரியாவார்.

நேற்று மாலை 5 மணியளவில் மலேஷியாவிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்த குறித்த சந்தேக நபர் விமான நிலையத்திலிருந்து வெளியே செல்ல முற்பட்டவேளை அவரின் நடத்தையில் சந்தேகம் கொண்ட சுங்க அதிகாரிகள், அவரின் பயணப்பொதியை சோதனையிட்டுள்ளனர்.

இதன்போது பாலியல் உணர்வுகளை தூண்டக் கூடிய மருந்து வில்லைகள் மற்றும் மேனி பாரமாரிப்புக்கு  பூசும் இரவுநேர கிரீம் வகைகளை  சுங்க அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சுங்க அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.