Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Wednesday, January 23, 2019

ரஜினியின் மகள் சௌந்தர்யாவின் திருமண திகதி அறிவிப்பு !!

Currently online
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் இளைய மகள் செளந்தர்யாவுக்கு வரும் பெப்ரவரி மாதம் 11ம் திகதி திருமணம் நடக்கவிருக்கிறது. 

நடிகர் ரஜினிகாந்த்தின் இளைய மகள் சௌந்தர்யா சென்னையைச் சேர்ந்த தொழிலதிபர் அஸ்வினை 2010ல் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தையும் பிறந்தது. அந்தக் குழந்தைக்கு வேத் என்று பெயரிட்டனர். இவர்களுக்குள் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக, ஒருமித்த கருத்து அடிப்படையில், சென்னை மாவட்ட முதன்மை குடும்ப நல நீதிமன்றத்தின் மூலம் விவகாரத்து பெற்றனர். 

இந் நிலையில் சௌதர்யாவுக்கும், தொழில் அதிபர் விசாகனுக்கும் அண்மையில் சென்னையில் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. விசாகனும் விவாகரத்து பெற்றவர். 

விசாகன் மருந்து தயாரிப்பு நிறுவனம் நடத்தி வருகிறார். வஞ்சகர் உலகம் என்ற படத்தில் நடித்துள்ளார். திமுக பிரமுகர் சூலூர் வணங்காமுடிக்கு உறவினர் விசாகன் என்று கூறப்படுகிறது. 

சௌந்தர்யா மற்றும் விசாகன் திருமணம் வரும் பெப்ரவரி மாதம் 11ம் திகதி நடக்க இருக்கிறது. இதில் பல பிரபலங்கள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.