Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Thursday, January 10, 2019

''பேட்ட'' ரிலீஸான இன்று திரையரங்கில் திருமணம் செய்து கொண்ட தம்பதிகள் !!

Currently online
ரஜினியின் 'பேட்ட', அஜித்தின் 'விஸ்வாசம்' ஆகிய படங்கள் இன்று ரிலீஸாகி உள்ளன.

இந் நிலையில் ரஜினி ரசிகர் மன்ற தென் சென்னை அமைப்பாளர் சினோரா அசோக் தலைமையில், சென்னை ராயப்பேட்டை உட்லண்ட்ஸ் திரையரங்கில் இன்று (10) காலை ஒரு ஜோடிக்குத் திருமணம் நடைபெற்றது.

தாம்பரத்தைச் சேர்ந்த அன்பரசு என்பவருக்கும் காமாட்சிக்கும் திரையரங்கிலேயே திருமணம் நடந்தது. 

அவர்களுக்கு மிக்ஸி, கிரைண்டர், பீரோ, வாஷிங் மெஷின், பாத்திரங்கள், சூட்கேஸ் உள்ளிட்ட ஏராளமான சீர்வரிசைகள் வழங்கப்பட்டது.

நாதஸ்வரம், மத்தளம் உள்ளிட்ட இன்னிசை வாத்தியங்கள் முழங்க, ஐயர் முன்னிலையில் திருமணம் நடைபெற்றது. திருமணத்துக்கு வந்தவர்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன.

புதுமணத் தம்பதியினர் 'பேட்ட- பொங்கல் திருவிழா' என்று எழுதப்பட்ட கேக்கை வெட்டி ஒருவருக்கொருவர் ஊட்டியுள்ளனர்.
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.