Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Wednesday, January 02, 2019

விளையாட்டு விபரீதமானதில் ஆசிரியர் ஒருவர் உயிரிழப்பு !!

Currently online
மதுபோதையில் பிள்ளைகளிற்கு விளையாட்டு காட்ட முயன்ற ஆசிரியர் ஒருவர் கயிறு இறுகி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் நேற்றிரவு பளையில் இடம்பெற்றுள்ளது.

இவ்வாறு உயிரிழந்தவர் பளை, கரந்தாய் பகுதியை சேர்ந்த முத்துகிருஸ்ணன் கோபாலகிருஸ்ணன் (37) என்ற ஆசிரியராவர்.

குறித்த ஆசிரியர் புதுவருட தினமான நேற்று நண்பர்களுடன் மதுபான விருந்தில் கலந்து கொண்டிருக்கிறார்.

போதையின் உச்சத்திற்கு சென்ற ஆசிரியர், இரவு பிள்ளைகளிற்கு விளையாட்டு காட்டிக் கொண்டிருந்திருக்கிறார்.

அதன்போது கயிற்றில் தூங்குவதை போல செய்து காண்பித்தபோது, எதிர்பாராதவிதமாக கயிறு கழுத்தில் இறுகியுள்ளது. 

இதையடுத்து உடனடியாக அவரை மீட்டு பளை வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்தனர். 

பின்னர் மேலதிக சிகிச்சைக்காக கிளிநொச்சி வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். எனினும், வழியிலேயே அவர் உயிரிழந்துள்ளார்.
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.