Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Monday, February 18, 2019

இன்றைய நாளுக்கான ராசி பலன்கள் (18.02.2019)

Currently online
மேஷம்
புதிய கோணத்தில் சிந்தித்து பழைய சிக்கலை தீர்ப்பீர்கள். வீடு, வாகனப் பராமரிப்பு செலவுகள் அதிகரிக்கும். நீண்ட நாட்களாக பார்க்க நினைத்தவரை சந்திப்பீர்கள். புதுப்பொருள் சேரும். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாகும். உத்தியோகத்தில் விமர்சனங்களையும் தாண்டி முன்னேறுவீர்கள். எதையும் சாதிக்கும் நாள்.

ரிஷபம்
உங்கள் பேச்சில் அனுபவ அறிவு வெளிப்படும். பிள்ளைகளால் பெருமையடைவீர்கள். பூர்வீக சொத்து பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கும். மற்றவர்களுக்காக சில பொறுப்புகளை ஏற்பீர்கள். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். உத்தியோகத்தில் உங்கள் கருத்திற்கு ஆதரவு பெருகும். தைரியம் கூடும் நாள்.

மிதுனம்
குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும். சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். விலை உயர்ந்த பொருட்கள் வாங்குவீர்கள். காணாமல்போன முக்கிய ஆவணம் கிடைக்கும். புது வேலை அமையும். வியாபாரத்தில் புதிய முயற்சிகள் பலிதமாகும். அலுவலகத்தில் மரியாதை கூடும். புதிய பாதை தெரியும் நாள்.

கடகம்
ராசிக்குள் சந்திரன் இருப்பதால் உணர்ச்சி வசப்படாமல் அறிவுபூர்வமாக முடிவெடுக்கப் பாருங்கள். பிள்ளைகளின் எதிர்காலம் குறித்து யோசிப்பீர்கள். திட்டமிடாத செலவுகளும், பயணங்களும் குறுக்கிட்டாலும் சாமர்த்தியமாக சமாளிப்பீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களின் ஒத்துழைப்பு சுமாராக இருக்கும். உத்தியோகத்தில் சூட்சுமங்களை உணருவீர்கள். இடம் பொருள் ஏவல் அறிந்து செயல்பட வேண்டிய நாள்.

சிம்மம்
கணவன்-மனைவிக்குள் அனுசரித்துப் போவது நல்லது. கொஞ்சம் சிக்கனமாக இருங்கள். உடல் நலத்தில் கவனம் தேவை. அண்டை, அயலார் சிலரின் செயல்பாடுகளால் கோபம், எரிச்சல் அடையலாம். வியாபாரம் சுமாராக இருக்கும். உத்தியோகத்தில் மறைமுக தொந்தரவுகள் வந்து நீங்கும். அதிகம் உழைக்க வேண்டிய நாள்.

கன்னி
குடும்பத்தினருடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். உங்களால் மற்றவர்கள் ஆதாயமடைவார்கள். வீட்டை விரிவுப்படுத்துவீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் சவாலான வேலைகளையும் சாதாரணமாக முடிப்பீர்கள். சிந்தனை திறன் பெருகும் நாள்.

துலாம்
சுறுசுறுப்புடன் இன்றைய வேலைகளை முடித்துக் காட்டுவீர்கள். அனுபவ அறிவுடன் செயல்படுவீர்கள். உடன்பிறந்தவர்கள் ஒத்தாசையாக இருப்பார்கள். மனைவி வழியில் ஆதரவு பெருகும். வியாபாரத்தில் தள்ளிப்போன வாய்ப்புகள் தேடி வரும். உத்தியோகத்தில் அதிகாரிகள் முக்கியத்துவம் தருவார்கள். முயற்சிகள் பலிதமாகும் நாள்.

விருச்சிகம்
உங்கள் அணுகுமுறையை மாற்றிக் கொள்வீர்கள். பிள்ளைகளை புதியபாதையில் வழி நடத்துவீர்கள். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். வியாபாரத்தில் பற்று வரவு கணிசமாக உயரும். உத்தியோகத்தில் புது பொறுப்புகள் தேடி வரும். உற்சாகமான நாள்.

தனுசு
சந்திராஷ்டமம் நீடிப்பதால் பழைய கசப்பான சம்பங்கள் நினைவுக்கு வரும். சிலவற்றிற்கு உங்கள் அவசர முடிவுகள் தான் காரணம் என்பதை உணர்வீர்கள். வியாபாரத்தில் போட்டிகளையும் தாண்டி லாபம் வரும். உத்தியோகத்தில் விமர்சனங்களை கண்டு அஞ்ச வேண்டாம். அலைச்சல் அதிகரிக்கும் நாள்.

மகரம்
உற்சாகமாக எதையும் முன்னின்று செய்வீர்கள். குடும்பத்தில் ஆரோக்கியமான விவாதங்கள் வந்து போகும். விலை உயர்ந்த ஆபரணம் வாங்குவீர்கள். பயணங்களால் புத்துணர்ச்சி பெறுவீர்கள். வியாபாரத்தில் லாபம் வரும். உத்தியோகத்தில் பொறுப்புகள் கூடும். திறமைகள் வெளிப்படும் நாள்.

கும்பம்
பணப்புழக்கம் அதிகரிக்கும். உங்களிடம் பழகும் நண்பர்கள், உறவினர்களின் பலம் பலவீனத்தை உணர்வீர்கள். விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். வெளிவட்டாரத்தில் செல்வாக்கு உயரும். வியாபாரத்தில் புது யுக்திகளை கையாளுவீர்கள். உத்தியோகத்தில் உயரதிகாரிகள் அதிசயிக்கும் படி நடந்துக் கொள்வீர்கள். திடீர் யோகம் கிட்டும் நாள்.

மீனம்
வருங்காலத் திட்டத்தில் ஒன்று நிறைவேறும். பிள்ளைகளின் தனித்திறமைகளை கண்டறிவீர்கள். அநாவசியச் செலவுகளை கட்டுப்படுத்துவீர்கள். அக்கம்-பக்கம் வீட்டாரின் ஆதரவு கிட்டும். வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். உத்தியோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். கனவு நனவாகும் நாள்.
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.