Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Monday, February 04, 2019

1.95 பில்லியன் ரூபாய் செலவில் பலாலி விமான நிலையம் அபிவிருத்தி !!!

Currently online
1.95 பில்லியன் ரூபாய் செலவில்  பலாலி விமான நிலையத்தை பிராந்திய விமான சேவைகளை நடத்துவதற்கு அபிவிருத்தி செய்வதற்கான திட்டத்துக்கு அமைச்சரவை அனுமதி அளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த ஆண்டு ஒக்டோபர் 23ஆம் திகதி, 1965 மில்லியன் ரூபாய் செலவில்,  பலாலி விமான நிலையத்தை அபிவிருத்தி செய்யும் திட்டம் ஒன்றுக்கு  அமைச்சரவை அனுமதி அளித்திருந்தது.

இந்த நிலையில், அரசியல் குழப்பங்களுக்குப் பின்னர்,   பிரதமர் ரணில் விக்ரமசிங்கவினால்  அமைச்சரவையில் பலாலி விமான நிலைய அபிவிருத்திக்கான புதிய அமைச்சரவைப் பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

மேலும் இதற்கமைய, 100 பயணிகளை ஏற்றக் கூடிய விமானங்கள் வந்து செல்வதற்கு ஏற்றவகையில் பலாலி விமான நிலையம் அபிவிருத்தி செய்யப்படும் என கூறப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.