Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Monday, February 25, 2019

யாழில் விபத்து ; 22 வயதுடைய இளைஞன் பரிதாப பலி !!

Currently online
நேற்று பிற்பகல் யாழ்ப்பாணம் சங்குப்பிட்டி பாலத்திற்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றும் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

குறித்த விபத்தில் பொன்னாலை வீதி மானிப்பாயைச் சேர்ந்த 22 வயதான சிவப்பிரகாசம் தனுசன் என்ற இளைஞரே உயிரிழந்துள்ளதாக பூநகரிப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அத்துடன் மோட்டார் சைக்கிளில் பயணித்த மானிப்பாயைச் சேர்ந்த 24 வயதான வசந்தகுமார் நிரோசன் என்பவர் படுகாயங்களுக்கு உள்ளான நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மோட்டார் சைக்கிளில் பூநகரி நோக்கிப் பயணித்தபோது சங்குப்பிட்டிப் பாலத்திற்கு அருகிலுள்ள வளைவில் திருப்பிய வேளை, மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டினை இழந்து வீதி ஓரமாகக் காணப்பட்ட மின்கம்பத்துடன் மோதி விபத்திற்குள்ளாகியுள்ளது.

பூநகரிப் பொலிஸார் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.