Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Wednesday, February 20, 2019

காணாமல் போன 2 வயதுக் குழந்தை மீட்பு !!

Currently online
அக்கரப்பத்தனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹோல்புறூக் லோவர் கிரன்லி தோட்டத்தில் நேற்று (19)  மாலை 4 மணியளவில் காணாமல் போன  யசிப் விதார்த்(வயது-2) என்ற குழந்தை இன்று காலை 9 மணியளவில் பிரதேசவாசிகளால் மீட்கப்பட்டுள்ளது.

அப்பகுதி தேயிலை மலை பகுதியிலிருந்தே குறித்த குழந்தை  மீட்கப்பட்டுள்ளது.

தனது வீட்டில் விளையாடி கொண்டிருந்து விட்டு வெளியே சென்ற போதே குழந்தை திடீரென காணாமல் போயிருந்தது.

இதனையடுத்து குழந்தையை தேடும் பணியில் பொலிஸாரும், பிரதேசவாசிகளும், தலவாக்கலை விசேட அதிரடி படையினரும் ஈடுப்பட்டிருந்தனர்.

நேற்று இரவு வரை தேடியும் கிடைக்காத பட்சத்தில் இன்று காலை பிரதேசவாசிகள் அப்பகுதி தேயிலை மலைகளில் தேடும் பொழுது மேற்படி குழந்தையின் வீட்டிலிருந்து சுமார் 2 கிலோ மீற்றர் தூரத்தில் தேயிலை மலை பாதையில் குறித்த குழந்தை மீட்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை அக்கரப்பத்தனை பொலிஸார் மற்றும் நுவரெலியா பொலிஸ் அதிகாரிகளும் இணைந்து முன்னெடுத்து வருகின்றனர்.
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.