Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Thursday, February 28, 2019

30 வருட அரசியல் வாழ்க்கை ; மங்கள சமரவீரவிற்கு கொழும்பில் இன்று விழா !!

Currently online
கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இன்று பிற்பகல் 3 மணிக்கு முக்கிய நிகழ்வொன்று நடைபெறவுள்ளது.

நிதியமைச்சர் மங்கள சமரவீரவின் அரசியல் வாழ்க்கை 30 வருடங்களைப் பூர்த்தி செய்துள்ளதை முன்னிட்டு குறித்த நிகழ்வு இடம்பெறவுள்ளது. 

குறித்த நிகழ்வின்போது ஐக்கிய நாடுகள் அமைப்பின் முன்னாள் அமெரிக்க உயர்ஸ்தானிகர் சமந்தா பவர் பிரதான உரையை நிகழ்த்தவுள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் இந்த வைபத்தில் விசேட அதிதிகளாக கலந்து கொள்ளவுள்ளனர்.

மாத்தறை மாவட்டத்தில் சமூக, பொருளாதார அரசியல் மாற்றங்களை உருவாக்குவதில் மூன்று தசாப்தங்களாக அமைச்சர் மங்கள சமரவீர முக்கிய வகிபாகத்தைக் கொண்டுள்ளார். 

அவரது அரசியல் பயணத்தின் உறுதிமிக்க பணிகளை மெச்சும் வகையிலேயே இந்த முக்கிய வைபவத்தை ஏற்பாடு செய்திருப்பதாக ஏற்பாட்டுக்குழு தெரிவித்துள்ளது.
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.