Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Friday, February 01, 2019

பிரேசில் அணை விபத்து : பலி எண்ணிக்கை 99 ஆக அதிகரிப்பு !!!

Currently online
வாலே என்கிற நிறுவனத்தின் இரும்பு தாது சுரங்கம்  பிரேசில் நாட்டில் மினாஸ் கெராயிஸ் மாகாணத்தில், புருமாதின்ஹோ நகரில் வந்தது. இதன் அருகில் அதே நிறுவனத்தால் கட்டப்பட்ட மிகப்பெரிய அணை இருந்தது.

எதிர்பாராத வகையில் கடந்த வாரம்  குறித்த  அணை உடைந்து ஊருக்குள் சேறு புகுந்தது. இரும்பு தாது சுரங்கத்தின் தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானவர்கள் சேற்றில் சிக்கிக்கொண்டனர்.

இதையடுத்து ஹெலிகாப்டர்கள் உதவியோடு மீட்பு பணிகள் முடுக்கிவிடப்பட்டன. எனினும் பலரை பிணமாகத்தான் மீட்க முடிந்தது. அந்த வகையில் இதுவரை 84 பேர் பலியாகி இருப்பதாக கடைசியாக கிடைத்த தகவல்கள் தெரிவித்திருந்தன.

மேலும் இந்த நிலையில், மேலும் 15 பேரின் உடல்களை மீட்பு குழுவினர் நேற்று மீட்டனர். இதன் மூலம் பலி எண்ணிக்கை 99 ஆக உயர்ந்தது. அதே சமயம் சேற்றில் சிக்கி உயிருக்கு போராடிக்கொண்டிருந்த சுமார் 100 பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளார்கள்.

இருப்பினும் மாயமான 259 பேரின் கதி என்ன? என்பது தெரியவில்லை. அவர்களை தேடும் பணியை மீட்பு குழுவினர் முழு நம்பிக்கையுடன் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.