Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Tuesday, February 26, 2019

ஏ-9 வீதியில் சொகுசு பேருந்து விபத்து ; ஸ்தலத்திலேயே ஒருவர் பலி !!

Currently online
சொகுசு பேருந்து ஒன்று விபத்துக்குள்ளாகியதில் ஒருவர் ஸ்தலத்தில் உயிரிழந்ததோடு மூன்று பேர் காயமடைந்துள்ளனர்.

கொழும்பிலிருந்து யாழ். நோக்கி பயணித்த சொகுசு பேருந்து முல்லைத்தீவு -  மாங்குளம் பொலிஸ் பிரிவின் பனிங்கங்குளம் ஏ-9 வீதியில் இன்று (26) அதிகாலை விபத்துக்குள்ளாகியுள்ளது.

கல் ஏற்றிய டிப்பர் வாகனமொன்று யாழ். நோக்கி பயணிக்கும் திசையில் தரித்து நின்ற போது அதிவேகமாக பயணித்த சொகுசு பேருந்து மோதியே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இதில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். மேலும் காயமடைந்தவர்கள் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

குறித்த விபத்து தொடர்பில் மாங்குளம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.