Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Friday, February 01, 2019

பல இளைஞர்களை திருமணம் செய்து ஏமாற்றிய பெண் கைது !!!

Currently online
பல இளைஞர்களை திருமணம் செய்து நிதி மோசடியில் ஈடுபட்ட பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த பெண் இத்தாலிக்கு அழைத்துச் செல்வதாக தெரிவித்து போலியான ஆவணங்களை பயன்படுத்தி இந்த முயற்சியில் ஈடுபட்டுள்ளார். .

இப் பெண்ணை கடுனேரிய பிரதேசத்தில் அமைந்துள்ள விடுதியொன்றில் வைத்து பொலிஸார்  கைது செய்துள்ளனர்.

தங்கொடுவ மாவதகம பிரதேசத்தை சேர்ந்த 35 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தாயாவர்  மேலும் சந்தேகநபரான பெண்ணின் கணவர் தொடர்பில் எவ்வித தகவல்களும் கிடைக்கவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த பெண்ணால் பாதிக்கப்பட்ட இளைஞர்கள் சிலர் மேற்கொண்டிருந்த முறைப்பாட்டுக்கு அமைய விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு .இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபரான பெண் இளைஞர்களிடம் இருந்து 5,10,15 மற்றும் 17 இலட்சம் ரூபாய்களை இவ்வாறு மோசடி செய்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது. விசாரணையில் சந்தேகநபரான பெண்ணுடன் இணைந்து மோசடியில் ஈடுபட்டிருந்த பெண்ணொருவர் உள்ளிட்ட நான்கு பேர் கடந்த 19ம் திகதி கைது செய்யப்பட்டனர்.

சந்தேகநபர் வௌிநாடு செல்ல தயாராவதாக கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய முன்னெடுக்கப்பட்ட விசாரணையின் படி இன்று அதிகாலை அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவர் கைது செய்யப்பட்டதை அறிந்த பாதிக்கப்பட்ட இளைஞர்கள் 8 பேர் மாரவில பொலிஸார் வந்திருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

போலியான பெயரில் தன்னை அடையாளப்படுத்தியிருந்த குறித்த பெண் அந்த பெயரில் போலியான அடையாள அட்டை , பிறப்புச் சான்றிதழ் ஆகியவற்றை தயாரித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அதேபோல் , இத்தாலி செல்வதற்காக போலியான விசாவையும் சந்தேகநபரான பெண் தயாரித்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.