Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Tuesday, February 12, 2019

குற்றவாளியின் கழுத்தில் மலைப்பாம்பை சுற்றி விசாரணை ; பரபரப்பு வீடியோ !!

Currently online
இந்தோனேசியாவில் செல்போன் திருடியதாக ஒருவரைப் பப்புவா பொலிசார் கைது செய்தனர். அவனிடம் நடத்திய விசாரணையில் குற்றத்தை ஒப்புக் கொள்ளவில்லை. அவன் மௌனமாக இருந்ததை அடுத்து, பொலிசார் அடுத்தக்கட்ட நடவடிக்கையை  மேற்கொண்டனர். 

அதாவது, மலைப்பாம்பு ஒன்றைக் கொண்டு வந்து, அவன் கழுத்தில் சுற்றி விசாரணை நடத்தினர். பாம்பின் வாய்ப் பகுதியை குற்றவாளியின் முகத்திடம் கொண்டு சென்றனர். பின்னர் அவனது ஆடைக்குள் நுழைய வைக்க முயற்சித்தனர். இதனால் சம்பந்தப்பட்ட குற்றவாளி பயத்தில் அலறியுள்ளான். 

இந்த சம்பவத்தை மற்றொரு பொலிசார் வீடியோவாக எடுத்துள்ளார். இது இணையத்தில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

இந்த விவகாரத்தில் பப்புவா பொலிசார் மன்னிப்புக் கோரியுள்ளனர். இருப்பினும் குற்றவாளியின் கழுத்தில் சுற்றப்பட்ட மலைப்பாம்பு விஷத்தன்மை கொண்டது இல்லை. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவத்திற்கு மனித உரிமை ஆணைய வழக்கறிஞர் வெரோனிகா கோமன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். பொலிசாரின் விசாரணை முறை அதிக சித்ரவதை செய்யக்கூடியதாக உள்ளது. 

பொலிசாரே சட்டம், ஒழுங்கை மீறுவதாக அமைந்துள்ளதாக என குற்றம்சாட்டியுள்ளார். சமீப காலமாக பப்புவான் மக்களுக்கு எதிராக இனவெறி பாகுபாட்டோடு பொலிசாரும், இராணுவத்தினரும் செயல்பட்டு வருவதாக குறிப்பிட்டுள்ளார். 
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.