Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Monday, February 11, 2019

ஏழையின் கண்ணீர்...........!!!!!!!! கூடலூர் சிந்துஷன்

Currently online
நீண்ட வானம் கூரையாக
தார்ச்சாலை வீடாகி
வருத்தம் மிகுந்த இவ்வாழ்வு
நிரந்தரமாகி தொடர்கிறதே!

ஏங்கிவிழும் கண்ணீர் துளிகளும்
நெஞ்சம் குடையும் ஏக்கங்களும்
முடியாத வறுமையும் பொறுமையும்
சொந்தங்களாகி போனதே!

நுகர்ந்ததில்லை வசந்தம் எம்மை
புசித்ததில்லை ருசி நாவை
வழியறியா வறியர்கள் எமக்கு 
வெறுமையே சொத்தானதே!

தினம் வேடிக்கை பார்ப்பவரே
வாடிக்கை தான் எமக்கு
ஏழைக்கு உதவிடும் எண்ணங்களோ
மனிதர் மனதிலும் குறைதானே!

ஏழ்மை என்னும் எதிரியும்
சாதி மத பாகுபாடும்
பாடையேறி செல்லும் வரை
நாடெங்கும் சுடுகாடே!

          நன்றி 
கூடலூர் சிந்துஷன்
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.