Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Tuesday, February 05, 2019

பெற்ற மகளை துடிதுடிக்க கழுத்தை நெரித்து கொலை செய்த தந்தை !!!

Currently online
வேறு சமுகத்தை சேர்ந்த நபரை காதலித்ததால், பெற்ற மகளை தந்தையே துடிதுடிக்க கழுத்தை நெரித்து கொலை செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த சம்பவம் ஆந்திர மாநிலத்தில் இடம்பெற்றுள்ளது. பிரகாசம் மாவட்டத்தை   சேர்ந்த கோட்டா வெங்கட் ரெட்டி என்பவருடைய மகள் வைஷ்ணவி

குறித்த மாணவி  தனியார் கல்லூரி ஒன்றில் படித்து வருகிறார். இவர்  சக கல்லூரி மாணவர் ஒருவரை சில வருடங்களாகவே காதலித்து வந்துள்ளார். இதனை அறிந்த வெங்கட், பலமுறை மகளை கண்டித்து பார்த்துள்ளார். ஆனால் வைஷ்ணவி, தந்தையை  எதிர்த்து பேசி வந்துள்ளார்.

இந்த நிலையில்  கல்லுரியிலிருந்து வேகமாகவே வைஷ்ணவி உடல்நிலை சரியில்லை எனக்கூறிவிட்டு வீடு திரும்பியுள்ளார்.வீட்டிற்கு வந்த உடனே, தந்தைக்கும்-மகளுக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. உங்களின் அனுமதி இல்லாமலே காதலனை திருமணம் செய்துகொள்வேன் என வைஷ்ணவி கூறியுள்ளார். இதில் ஆத்திரமடைந்த வெங்கட், திடீரென மகளின் கழுத்தை பிடித்து நெரித்து கொலை செய்துள்ளார்.

இந்த சம்பவம் அறிந்து வந்த பொலிஸார் வைஷ்ணவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், வெங்கட்டை கைது செய்துள்ள பொலிஸார் ஆணவக்கொலையா? என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.