Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Monday, February 18, 2019

ஓய்வு முடிவை அறிவித்தார் வெஸ்ட் இண்டீஸ் அணியின் அதிரடி வீரர் !!

Currently online
வெஸ்ட் இண்டீஸ் அணியின் அதிரடி வீரர் கிறிஸ் கெய்ல், வரும் உலகக் கோப்பை தொடருடன் ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். 

டி-20 தொடங்கி டெஸ்ட் கிரிக்கெட் வரை எந்த வகையான போட்டியாக இருந்தாலும், தனது அதிரடி ஆட்டம் மூலம் ரசிகர்களை கவர்ந்தவர் கிறிஸ் கெய்ல். 

இடது கை ஆட்டக்காரரான இவர், வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக இதுவரை 284 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 49 அரைசதம், 23 சதம் உட்பட 9,727 ரன்கள் அடித்துள்ளார். 

கடைசியாக கடந்த ஜுலை மாதம் பங்களாதேஷ் அணிக்கு எதிரான போட்டியில் விளையாடிய கெய்ல், நீண்ட இடைவெளிக்குப் பின், இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் இடம்பெற்றார். 

இந் நிலையில், வரும் உலகக் கோப்பை தொடருடன் ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக கிறிஸ் கெய்ல் அறிவித்துள்ளார். 

இதனை, வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரியமும் உறுதி செய்துள்ளது. 

ஒருநாள் போட்டிகளில் அதிக சதம் அடித்த வெஸ்ட் இண்டீஸ் வீரர், சர்வதேச கிரிக்கெட்டில் அதிக சிக்சர் அடித்த வீரர் உள்ளிட்ட பல சாதனைகளுக்கு சொந்தக்காரரான கிறிஸ் கெய்லின் ஓய்வு அறிவிப்பு, ரசிகர்களை சோகமடைய செய்துள்ளது.
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.