Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Saturday, February 09, 2019

ஞானசார தேரருக்கு நீதிமன்றம் வழங்கிய அதிரடி உத்தரவு !!

Currently online
ஹோமாகம மேல் நீதிமன்றமானது பொதுபலசேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் குற்றவாளியே அறிவித்திருந்தது.

காணாமல் ஆக்கப்பட்ட ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொடவின் மனைவியான சந்தியா எக்னெலிகொடவை நீதிமன்றில் வைத்து அச்சுறுத்திய விவகாரத்தில், நீதிமன்றத்தை அவமதித்தார் என கடூழிய சிறைத் தண்டனை அனுபவித்து வரும் ஞானசார தேரர், குற்றவாளியே என நீதிமன்றம் அறிவித்துள்ளது.

இது குறித்து ஹோமாகம நீதிவான் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை உறுதி செய்த மேல் நீதிமன்றம், நீதிவான் நீதிமன்றம் வழங்கிய 6 மாத கால சிறைத் தண்டனையை மட்டும் 5 வருடங்களுக்கு ஒத்தி வைத்தது.

மேலும் ஞானசார தேரர், நீதிவான் நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக தாக்கல் செய்த மேன் முறையீட்டின் மீது நேற்று தீர்ப்பறிவித்தே ஹோமாகம மேல் நீதிமன்றின் நீதிபதி அமல் திலகரத்ன இதனை அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.