Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Thursday, February 28, 2019

அபினந்தனை உடனடியாக ஒப்படைக்குமாறு பாகிஸ்தானுக்கு இந்தியா வலியுறுத்தல் !!

Currently online
விமானப்படை வீரர் அபினந்தனை உடனடியாக இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும் என பாகிஸ்தான் வெளியுறவுத்துறையிடம் இந்திய தூதர் வலியுறுத்தி உள்ளார். 

பாகிஸ்தான் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்ததாக இந்திய போர் விமானத்தை பாகிஸ்தான் ராணுவம் சுட்டு வீழ்த்தியது. அத்துடன் இந்திய விமானி அபினந்தனை கைது செய்து, அது தொடர்பான விவரத்தையும் வெளியிட்டது. விமானப்படை ‘விங் கமாண்டர்’ அபினந்தனிடம், பாகிஸ்தான் அதிகாரிகள் விசாரணை நடத்தும் வீடியோவும் வெளியிடப்பட்டது.

இந்த வீடியோ வெளியிடப்பட்டதற்கு இந்திய வெளியுறவுத்துறை கண்டனம் தெரிவித்தது.  காயமடைந்த இந்திய விமானப்படை வீரரின் படங்களை மோசமான வகையில் காட்சிப்படுத்துதல் சர்வதேச மனித உரிமை சட்டங்களின் அனைத்து விதிமுறைகள் மற்றும் ஜெனிவா உடன்படிக்கையில் உள்ள ஷரத்துகளை மீறும் வகையில் அமைந்துள்ளது என கூறியது. விமானி அபினந்தனை உடனடியாக விடுவிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியது.

அத்துடன் அபினந்தனை விடுதலை செய்வதற்கு, ராஜாங்கரீதியிலான நடவடிக்கையை இந்தியா தீவிரப்படுத்தி உள்ளது. அபினந்தனை உடனடியாக ஒப்படைக்க வேண்டும் என பாகிஸ்தான் வெளியுறவுத்துறையிடம், அந்நாட்டிற்கான இந்திய தூதர் இன்று வலியுறுத்தி உள்ளார். 

போர் கைதியாக பிடிபட்ட அபினந்தனை ஜெனிவா ஒப்பந்தத்தின்படி எந்தவித சேதாரமும் இன்றி ஒப்படைக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

முன்னதாக அபினந்தனை ஒப்படைக்குமாறு இந்தியாவில் உள்ள பாகிஸ்தான் துணை தூதரிடம், இந்திய வெளியுறவுத்துறை வலியுறுத்தியது.

போர் கைதிகளை நடத்தும் முறை மற்றும் அவர்களின் உரிமை குறித்து ஜெனிவா ஒப்பந்தத்தில் பல்வேறு அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. குறிப்பாக போர்க் கைதிகளை கண்ணியமாக நடத்துவதுடன் போர் முடிந்ததும் அவர்களை எந்தவித பழிவாங்குதலும் இல்லாமல் விடுவிக்கப்பட வேண்டும் என அந்த ஒப்பந்தத்தில் கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.