Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Monday, February 25, 2019

அமைதியை நிலைநிறுத்த பிரதமர் மோடி ஒரு வாய்ப்பு வழங்க வேண்டும் !!

Currently online
அமைதியை நிலைநிறுத்த பிரதமர் மோடி ஒரு வாய்ப்பு வழங்க வேண்டும் என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.

அமைதியை நிலைநிறுத்த இந்திய பிரதமர் மோடி ஒரு வாய்ப்பு வழங்க வேண்டும் எனவும், புல்வாமா தாக்குதல் தொடர்பாக இந்தியா விசாரணை நடத்தி ஆதாரங்களை வழங்கினால் அதற்கு உரிய நடவடிக்கை எடுக்க பாகிஸ்தான் தயாராக உள்ளது எனவும் பாகிஸ்தான் பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறப்பட்டுள்ளது.  

2015-ல் பாகிஸ்தான் தேர்தலில் வெற்றி பெற்ற பின் தான் மோடியை சந்தித்தபோது இருவரும் வறுமை மற்றும் கல்வியின்மை ஆகியவற்றை எதிர்த்து போராட உறுதிமொழி எடுத்ததையும்  அந்த அறிக்கையில் நினைவு கூர்ந்துள்ளார் இம்ரான் கான்.

ஈரானை பூர்வீகமாக கொண்ட பதான் இனத்தினர் உண்மை, நேர்மை மற்றும் சுயமரியாதை மிக்கவர்கள் என்று கூறப்படும் நிலையில், நேற்று முன் தினம் ராஜஸ்தானில் உரையாற்றிய மோடி, இம்ரான்கான் உண்மையான பதான் மகனாக இருந்தால் தாக்குலுக்கு காரணமானவர்களை சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் என மோடி இம்ரானுக்கு சவால் விடுத்தார். 

மோடியின் இந்த பேச்சுக்கு மறுநாள் இம்ரான் கானின் இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.