Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Saturday, February 16, 2019

யாழில் முகமூடிக் கும்பலின் அட்டகாசம் !!

Currently online
ஆறுபேர் கொண்ட கும்பல் முகத்தை மூடிக் கட்டியவாறு யாழ்ப்பாணம், இளவாலை கவுணாவத்தை ஆலயத்துக்கு அருகிலுள்ள வீட்டினுள்  புகுந்து தாக்குதல் நடத்தியுள்ளது.

அத்துடன் வீட்டிலிருந்து உந்துருளியையும் களவாடிச் சென்றுள்ளது. இச் சம்பவம் நேற்றுமுன்தினம் இரவு இடம்பெற்றுள்ளது.

மூன்று உந்துருளிகளில் வாள் மற்றும் கொட்டன்களுடன் 6 பேர் கொண்ட கும்பல் வீடு புகுந்து தாக்குதல் நடத்தியதாகபொலிசார் தெரிவித்தனர்.

சம்பவத்தின்போது வீட்டில் மூன்று பேர் இருந்ததாகவும் அவர்கள் அச்சத்தால் வெளியில் வரவில்லை என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த கும்பல் வீட்டுக் கண்ணாடிகளை உடைத்து, பொருட்களைச் சேதப்படுத்தி அட்டகாசம் புரிந்ததோடு வீட்டிலிருந்த உந்துருளியையும் எடுத்துச் சென்றுள்ளது.

இதையடுத்து வீதியில் செல்லும் போது பாதையில் வந்த நபரை வாளால் வெட்டிக் காயப்படுத்தியுள்ளனர். காயமடைந்த இளைஞன், தெல்லிப்பழை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.