Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Thursday, February 28, 2019

அந்த நாள் திருமணம்............!!!!! வட்டக்கச்சி வினோத்

Currently online
ஆறுமதத்துக்கு முன்னே
மூட்டிய அடுப்பு
அணையாமல் எரியும்
அடுத்த வேளை என்ன சமையல்
அடிக்கடி கேள்வியாக இருக்கும்...

பொன்னாச்சிப் பாட்டி வரவேணும்
பொன்நிறத்தில் முறுக்கு
பொரித்தெடுக்க
பொக்கை வாயில் வெற்றிலை யோடு
பொறுமையாய் பேசும்
பழமையின் பொக்கிசங்கள்.....

சடங்குகள் சண்டையில்
தொடங்கி
பண்பாடுகளின் பகுத்தறிவில்
சரியாகிப் போகும்....

பெட்டி படுக்கை யோட
பெண்டில் பிள்ளை எல்லாம் வந்திருக்கும்
பந்தலுக்குள்ள
பந்தமெல்லாம் கூடி
பல கதை பேசி மகிழும்

பட்டுப் போல திரியும்
மச்சாளை எட்டுத்தரம்
தேடும் கண்கள்
வெட்டிப் போகும்
அவள் வேல் விழி
பார்வை
கோடி கொட்டினாலும் கிடைக்காது....

   நன்றி 
வட்டக்கச்சி
 வினோத்

jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.