Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Tuesday, February 12, 2019

இலங்கைக்கு முதலிடம் ; எதில் தெரியுமா ??

Currently online
உலக அளவில் இந்த ஆண்டு சுற்றுலாவுக்கு தகுந்த நாடுகளின் பட்டியலில் இலங்கை முதலிடம் பிடித்துள்ளது.

இந்த ஆண்டில் சுற்றுலாவுக்கு உகந்த நாடுகளின் பட்டியலை  சர்வதேச அளவில் பிரபலமான லோன்லி பிளானட் என்ற வலைதளம் வெளியிட்டுள்ளது.

அதில் இலங்கை முதலிடத்தை பிடித்துள்ளது. இரண்டாவது இடத்தில் ஜேர்மனி உள்ளது. மூன்றாவது இடத்தில் ஜிம்பாப்வே உள்ளது.

குறித்த பட்டியலில் இதுவரை சுற்றுலாவில் பிரபலமாகாத பல நாடுகள் இடம்பெற்றுள்ளது.

மத்திய ஆசியாவில் உள்ள கிர்கிஸ்தான் நாடு 5-வது இடத்தில் உள்ளது. சீனாவின் வடமேற்கு எல்லையில் அமைந்துள்ள இந்த நாடானது சர்வதேச அளவில் சுற்றுலாவுக்கு பெயர்போன பட்டியலில் இதுவரை இடம்பெற்றிருக்கவில்லை.

கினியா வளைகுடாவில் அமைந்துள்ள சாவ் டோம் மற்றும் பிரின்சிபி தீவுகளும் சுற்றுலாவுக்கான பட்டியல்களில் இதுவரை சர்வதேச அளவில் இடபெறவில்லை.
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.