Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Thursday, February 14, 2019

இலஞ்சம் பெற முற்பட்ட வேளையில் வசமாக மாட்டிய அதிபர் !!

Currently online
இலஞ்சம் பெற முற்பட்ட சந்தர்ப்பத்தில் அதிபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர் காலியில் உள்ள பெண்கள் பாடசாலை அதிபராவார்.

குறித்த அதிபர், 1 ஆம் ஆண்டிற்கு மாணவன் ஒருவரை சேர்ந்துக் கொள்வதற்காக 1 இலட்சம் ரூபா இலஞ்சம் பெற்றுக் கொள்ள முற்பட்ட போது, அவர் இலஞ்ச ஊழல் ஒழிப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். 

இரண்டு வாரங்களாக குறித்த மாணவன் பாடசாலைக்கு வருகை தந்த போது அவருடைய பெயர், இடாப்பில் பதிவு செய்யப்பட்டிருக்கவில்லை. குறித்த மாணவனின் பெயர் இடாப்பில் பதிய படவேண்டுமாயின், 1 இலட்சம் ரூபா கொடுக்க வேண்டும் என்று அதிபர் தெரிவித்துள்ளார். 

குறித்த விடயம் தொடர்பில் பெற்றோர் இலஞ்ச ஊழல் ஒழிப்பு பிரிவினரிடம் முறைப்பாடு செய்துள்ளனர். 

இதையடுத்து நேற்றைய நாளில் குறிப்பிட்ட இலஞ்சத் தொகையை, அதிபருக்கு வழங்க முற்பட்ட சந்தர்ப்பத்தில், குறித்த அதிபர் கைதாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.