Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Tuesday, February 05, 2019

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் அடுத்த மாதம் தொடங்குகிறது ரஜினியின் படப்பிடிப்பு

Currently online
அடுத்த படத்துக்கு ரஜினிகாந்த் தயாராகி உள்ளார்.  ஏ.ஆர்.முருகதாஸ் இந்த படத்தை இயக்குகிறார். திரைக்கதை உருவாக்கும் பணி முடிந்துள்ளது.  மார்ச் மாதம் இறுதியில் படப்பிடிப்பு  தொடங்கும் என்று கூறப்படுகிறது. 3 மாதங்கள் தொடர்ச்சியாக இதில் ரஜினி நடிக்கிறார்.

குறித்த இந்த படம் பற்றிய அதிகாரப்பூர்வ தகவல் இன்னும் வெளியாகாத நிலையில் படத்தை பற்றி பல்வேறு தகவல்கள் சமூக வலைத்தளத்தில் பரவி வருகின்றன.  நாற்காலி என்று  படத்துக்கு  தலைப்பு வைக்க முடிவு செய்து இருப்பதாக கூறப்பட்டது. இதனை முருகதாஸ் மறுத்தார். கதாநாயகியாக நடிக்க கீர்த்தி சுரேசை பரிசீலிப்பதாக கூறப்படுகிறது.

மேலும் முந்தைய படங்களான ரமணாவில் லஞ்சத்தையும், கத்தியில் விவசாயிகள் பிரச்சினைகளையும் சர்காரில் அரசியல்வாதிகள் முறைகேடுகளையும் முருகதாஸ் சொல்லி இருந்தார். ரஜினிகாந்த் படம் முழு அரசியல் கதையாக இருக்கும் என்று தகவல் கசிந்துள்ளது. இந்த நிலையில் முருகதாஸ் இயக்கும் புதிய படத்துக்காக ரஜினிகாந்தின் தோற்றத்தை ரசிகர்கள் உருவாக்கி இணையதளங்களில் வைரலாக்கி உள்ளமை குறிப்பிடத்தக்கது.


jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.