Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Saturday, February 02, 2019

சிறுமியை பாலியல் துர்நடத்தைக்கு உட்படுத்திய தாயின் கள்ளக் காதலன் !!!

Currently online
பதின்ம வயதுச் சிறுமியை பாலியல் துர்நடத்தைக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் கொக்குவில் பகுதியில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.  பாதிக்கப்பட்ட சிறுமியும், அவரது தாயாரும் கொக்குவில் பகுதியில் வசித்து வந்துள்ளனர். சிறுமியின் தந்தை விவாகரத்துப் பெற்ற நிலையில் சிறுமி தாயாருடன் வசித்து வந்துள்ளார்.

இச் சிறுமியின்  தாயாருக்கும் வேறு ஒரு நபருக்கும் இடையில் தொடர்பு ஏற்பட்டுள்ளது. இந்  நபர் சிறுமியின் வீட்டுக்கு வந்து சென்ற நேரங்களில், சிறுமியை பாலியல் துர்நடத்தைக்கு உட்படுத்தியுள்ளார். அது தொடர்பில் சிறுமி தனது தாயாருக்கு தெரியப்படுத்தியுள்ளார்.

இருப்பினும்  தாயார் அது தொடர்பில் கவனம் செலுத்தாத நிலையில், சிறுமி தனது தந்தைக்கு தெரியப்படுத்தியுள்ளார். சிறுமியின் தந்தை கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். தந்தையின் முறைப்பாட்டின் பிரகாரம் தாயின் பாதுகாப்பில் இருந்த சிறுமியை மீட்ட பொலிஸார், சிறுமியை மருத்துவ பரிசோதனைக்காக யாழ்.போதனா வைத்திய சாலையில் சேர்ப்பித்தனர். அத்துடன் சந்தேக நபரை கைது செய்வதற்கான நடவடிக்கைக்களை பொலிஸார் முன்னெடுத்தனர். சந்தேக நபர் இந்தியாவுக்குத் தப்பி சென்றுள்ளார்.

மேலும் சந்தேகநபர் யாழ்ப்பாணத்தில் உள்ள அவரது உறவினர் ஒருவரின் இறுதி சடங்குக்கு நேற்று வந்துள்ளார். அதனை அறிந்த பொலிஸார், சந்தேகநபரை வான் ஒன்றுடன் கைது செய்தனர். நபர் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார் என அதிர்வு இணைய புலனாய்வு செய்தியாளர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.