Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Friday, February 08, 2019

மின்தூக்கியில் சிக்கித்தவித்த எம்பிக்கள் ; பாராளுமன்றில் பெரும் குழப்பம் !!

Currently online
பாராளுமன்ற மின்தூக்கியில் பயணித்த பாராளுமன்ற உறுப்பினர்கள் 12 பேர் சுமார் 20 நிமிடங்கள் வரை அதற்குள் சிக்கி வெளியில் வர முடியாமல் தவித்த சம்பவம் நேற்று (07) சபையில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியது.

குறித்த விடயம் தொடர்பில் எம்.பிக்கள் பலரும் சபாநாயகரின் கவனத்திற்கு கொண்டு வந்தனர்.

இது தொடர்பில் ஆராய்ந்து தேவையான நடவடிக்கை எடுப்பதாகவும், தேவை ஏற்பட்டால் புதிய மின்தூக்கியை பொருத்துவதற்கு நடவடிக்கை எடுப்பதாகவும் சபாநாயகர் குறிப்பிட்டார்.

பாராளுமன்றம் நேற்று காலை 10.30 மணிக்கு சபாநாயாகர் கரு ஜயசூரியவின் தலைமையில் கூடியது. இதற்கு சில நிமிடங்களுக்கு முன்னர் தரைத்தளத்தில் இருந்து 2 ஆவது மாடிக்கு செல்வதற்காக 12 எம்.பிக்கள் மின்தூக்கியில் ஏறியுள்ளனர்.

இதில் இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் அலுவிஹார,எம்பிக்களான தினேஷ் குணவர்தன, உதவி கோரி மின்தூக்கியின் கதவையும் தட்டியுள்ளனர். உதவிக்கு எவரும் வராததோடு சில நிமிடங்கள் கழித்தே அதிகாரிகள் அங்கு வந்து சிக்கியிருந்த எம்.பிக்களை பாதுகாப்பாக மீட்டதாக அறிய வருகிறது.

இந்த விவகாரம் தொடர்பில் சபையில் கடும் விவாதம் ஏற்பட்டதுடன், இது சதியாக இருக்கலாம் என்றும் எதிரணியினர் குற்றஞ்சாட்டி, சம்பந்தப்பட்டவர்கள் குறித்து விசாரணை நடத்துமாறும் கோரினர்.

அரசியலமைப்பு பேரவை தொடர்பான சபாநாயகரின் அறிவிப்பை தொடர்ந்து சபையில் குழப்ப நிலை ஏற்பட்டு சபை 10 நிமிடங்கள் ஒத்திவைக்கப்பட்டது.

அதனை தொடர்ந்து மீண்டும் சபை கூடிய போது மின்தூக்கி விவகாரம் தொடர்பாக எம்.பிக்கள் பலரும் கருத்து வெளியிட்டனர்.
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.