Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Tuesday, February 05, 2019

ஆஸ்திரேலியாவில் பெய்து வரும் மழை காரணமாக வெளியேறும் முதலைகள் !!!

Currently online
வரலாறு காணாத பருவ மழை ஆஸ்திரேலியாவில் வட கிழக்கு பகுதியில் பெய்கிறது. இதனால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அதன் காரணமாக குவின்ஸ் லெண்ட் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகள் வெள்ளத்தில் மிதக்கின்றன.

வீடுகள், பள்ளிகள் மற்றும் விமான நிலையங்களில் தண்ணீர் புகுந்துள்ளது. இதனால் வீடுகளை விட்டு வெளியேறிய மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்கியுள்ளனர். சிலர் தங்களின் வீட்டு கூரைகளில் தஞ்சம் அடைந்துள்ளனர்.

தொடர்ந்து மழை பெய்வதால் அணைகளில் இருந்த முதலைகள் வெளியேறி தெருக்களிலும், ரோடுகளிலும், உலாவருகின்றன. இதனால் பொதுமக்களின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது.

அதுமட்டுமில்லாது  பல இடங்களில் நிலச்சரிவும், மின்சார வெட்டும் நிலவுகிறது. தொடர்ந்து வெள்ளம் அதிகரிப்பதையடுத்து மீட்பு பணியில் ராணுவம் ஈடுபடுத்தப்பட்டுள்ளது. 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள் தண்ணீரில் மிதக்கின்றன.

மேலும்  வெள்ளம் பாதித்த பகுதிகளில் தங்கியிருப்பவர்கள் வீடுகளை விட்டு வெளியேற உத்தரவிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.