Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Tuesday, February 19, 2019

விபத்தில் தாயும் மகளும் பரிதாப பலி !!

Currently online
விபத்தில் தாய் ஒருவரும் சிறு குழந்தை ஒன்றும் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

இவ்வாறு உயிரிழந்தவர்கள் லுணுகம்வெஹர பகுதியை சேர்ந்த 37 வயதுடைய தாயும் 3 வயதுடைய மகளும் என தெரியவந்துள்ளது.

கொழும்பு - வெல்லவாய பிரதான வீதியின் தங்கல்ல, சீனிமோதர பகுதியில் இன்று (19) காலை முச்சக்கரவண்டி ஒன்றும் லொறி ஒன்றும் மோதிக் கொண்டதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். 

குறித்த விபத்தில் பலத்த காயமடைந்த முச்சக்கர வண்டி ஓட்டுனர், அவரின் மனைவி மற்றும் மகள் தங்கல்ல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் தாயும் மகளும் உயிரிழந்துள்ளனர். 

லொறி ஓட்டுனர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தங்கல்ல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.