Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Friday, February 22, 2019

கேப்பாப்புலவிலும் மனிதப் புதைகுழிகளா??

Currently online
கேப்பாப்புலவு மக்களை சந்தித்த சுவிஸ் தூதரக அதிகாரிகளிடம், மன்னார் புதைகுழி போன்று கேப்பாபுலவிலும் புதைகுழிகள் இருக்கலாம் என  கேப்பாப்புலவு மக்கள் நேற்று (21) தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பில் மேலும் அவர்கள் தெரிவிக்கையில் ;
நந்திக்கடல் ஏரிக்கு அண்மையாகவுள்ள மக்களின் காணிகளை படையினர் விடுவிக்க மறுத்து வருகின்றார்கள். 

போர் இறுதியாக நடைபெற்ற கரையோர பகுதிகளில் படையினர் நிலைகொண்டுள்ளார்கள். அத்துடன் மக்கள் வாழ் இடங்களில் உள்ள பல கிணறுகளை படையினர் மூடியுள்ளார்கள். 

விடுவிக்கப்பட்ட காணிகளில் கிணறுகள் இருந்த இடங்கள் தெரியாதவாறும் மூடியுள்ளார்கள். தற்போது போராட்டம் இடம்பெறும் கொட்டிலுக்கு அருகிலும் கிணறு ஒன்று இருந்தது. ஆனால் இப்போது அதுகூட இல்லை. விடுவிக்கப்பட்ட காணிகளில் இருந்த 25ற்கும் மேற்பட்ட கிணறுகளை படையினர் இடம் தெரியாதவாறு மூடியுள்ளார்கள். இது எங்களுக்கு சந்கேத்தினை ஏற்படுத்தியுள்ளது.

இறுதிப்போரின்போது மன்னார் மனிதப் புதை குழிபோன்று ஏதாவது புதைகுழிகளை அல்லது தடயங்களை கிணறுகளில் இட்டு மூடியுள்ளனரா என சந்தேகம் உள்ளது என்றும் தெரிவித்துள்ளார்கள்.
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.